Biography

அமர்நாத் டோக்ரா

திரு அமர்நாத் டோக்ரா அவர்கள் 1939 ஜூலை 21ல் ஜம்முவில் உள்ள ஓர் கிராமத்தில் பிறந்தார். 1957ல் பள்ளிப் படிப்பை முடித்த பின்னர் எம்.ஜி. அறிவியல் கல்லூரியில் சேர்ந்தார். 1959ல் ஆர்.எஸ்.எஸ் தொடர்பு, பின்னர் 1966 முதல் பாரதிய மஸ்தூர் சங்கத்தில் அகில பாரத அளவில் பல முக்கிய பொறுப்புகளில் இருந்து மக்கள் பணி ஆற்றி வருகிறார்.
பல வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்து, தற்போது தில்லியை இருப்பிடமாகக் கொண்டு தன்னுடைய எழுத்துப்பணியை மேற்கொண்டு வருகிறார். உலக வர்த்தக அமைப்பு, தொழில் மற்றும் பொருளாதார சிந்தனை, ஸ்வாமி விவேகானந்தரின் உத்வேகம் தரும் சொற்பொழிவுகள் போன்ற தலைப்புகளில் பல புத்தகங்களை எழுதியுள்ளார். சமீபத்தில் திரு. தத்தோபந்த் டெங்கடி அவர்களின் விரிவான வாழ்க்கை சரித்திரத்தை 9 தொகுப்புகளாக இயற்றியுள்ளார்.