எத்தனை ஜென்மம் எடுத்தாலும் இந்த புண்ணிய பூமி பாரதத்தில் பிறந்து ஹிந்து தர்ம நெறிமுறைகளைப் பின்பற்றி வாழ வேண்டும் என்பது அனைத்து ஹிந்துக்களுக்கும்
உள்ள திடமான, உணர்வுப்பூர்வமான எண்ணமாகும். இந்த உணர்வுகளை புண்படுத்தி ஹிந்து மக்களை வேட்டையாடிய அந்த பயங்கரவாத கூட்டங்கள் செய்த அட்டூழியங்கள் எத்தனை எத்தனை. அதில் ஒன்றுதான் கேரள மலபார் பகுதியில் நடந்த மாப்ளா கலவரம். இந்த கலவரத்தில் ஹிந்துக்களின் ரத்தம் ஆறாக அல்லவா ஓடியது. அந்த சம்பவத்தை நினைக்கும்போது நெஞ்சு பதறுகிறது. இது கதையல்ல, இது கேரளாவில் நடந்த உண்மை சம்பவம்.
1921 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21-ஆம் தேதி கேரளாவில் மாப்ளா கலவரம் தொடங்கியது. தொடர்ந்து பல மாதங்கள் நிகழ்ந்த இந்தக் கலவரத்தில் ஹிந்துக்களை மதம் மாறக் கட்டாயப்படுத்திய அந்தப் பகுதியின் கலவரக்கார இஸ்லாமியர்கள் செய்த அட்டூழியங்கள் எத்தனை. மதம் மாற மறுத்த ஹிந்துக்களை பல கொடுமைக்கு உள்ளாக்கினார்கள். இந்த மாபெரும் துயர சம்பவம் நிகழ்ந்து நூறு ஆண்டுகள் நிறைவுறும் இவ்வேளையில் (1921-2021) அதைப்பற்றி மேலும் முழுமையாக தெரிந்து கொள்வதற்கு விஜயபாரதம் பிரசுரம் வெளியிட்டுள்ள, திரு. ஸ்தாணுமாலயன் அவர்கள் எழுதிய ‘நூற்றாண்டு காணும் மாப்ளா கலவரம்’ என்கிற இந்தப் புத்தகம் பல அரிய உண்மை தகவல்களின் தொகுப்பாக அமைந்துள்ளது.