தமிழின் அறநெறி இலக்கியங்களில் முதன்மையானது திருக்குறள். வாழ்க்கையின் விழுமியங்களை, வாழ்க்கை நோக்கங்களை, மாண்புகளை, பல அதிகாரங்களில் விளக்கிக் கூறி இருக்கிறார் வள்ளுவர். வேத இலக்கியங்களின் தொடர்ச்சியாகவும் நீட்சியாகவும் நாம் திருக்குறளை பார்க்க முடியும் வேதங்கள் கூறும் வாழ்வியல் நெறிகள் பண்பாட்டு கூறுகளை நாம் திருக்குறளில் பார்க்கமுடிகிறது அதனால்தான் திருக்குறளை இன்று ஹிந்து தர்ம நெறியின் இன்னொரு வடிவமாகவே பார்க்கிறோம்.
ஆக வள்ளுவர் ஓர் ஹிந்து ஆன்மிகப் புலவர் என்பதில் சந்தேகம் இல்லை.
திருக்குறளில் அறத்துப்பாலில் இல்லறம் தொட்டு துறவறம் வரை பல்வேறு சிறப்புகளை எடுத்துக் கூறுகிறார். ராஜதந்திரம் போர்த்தந்திரம் உள்ளிட்ட உலக விவகாரங்கள் பற்றி பொருட்பால் கூறுகிறது. அக வாழ்க்கை பற்றி இன்பத்துப்பால் கூறுகிறது. இப்படி வாழ்வின் படிநிலைகளை படிப்படியாக கூறும் திருக்குறளை நாம் இன்னொரு கீதை என்று தான் கூற வேண்டும்.
Reviews
There are no reviews yet.