Free Shipping on Orders over ₹ 2,500/-

Biography

H.V. சேஷாத்திரி

திரு. ஹோ.வே. சேஷாத்ரி அவர்கள் புகழ்பெற்ற எழுத்தாளர், சிந்தனையாளர், சமுதாய பணிக்கென சமர்ப்பணமானவர். பெங்களூரைச் சேர்ந்த இவர் 1926ல் பிறந்தார். மைசூர் பல்கலைக் கழகத்தில் ரசாயனத் துறையில் முதுநிலை பட்டப்படிப்பில் தங்கப்பதக்கம் பெற்றவர். 1965ல் சமுதாயத்திற்காக, தேசத்திற்காக முழு நேரமும் தொண்டாற்ற ஆர்.எஸ்.எஸ் ஸில் (ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக சங்கம்) பிரச்சாரக்காக ஆனார்.

அகிலபாரத பொதுச் செயலாளர் உட்பட பல நிலைகளில் சங்கத் பொறுப்பு வகித்து பாரத நாடு முழுதும் தொடர்ந்து சுற்றுப்பயணம் செய்தவர். இடைவிடாமல் சமுதாயத்தின் நாடிபிடித்துப் பார்த்து, பெற்றறிந்த செறிவுமிக்க அனுபவமே இவரது எழுத்தின் பின்பலமான சிந்தனை. இவரது சொற்பொழிவுகள் செயல் துடிப்பை நோக்கி உந்துபவை. ஆணித்தரமான கருத்தில், சரளமான நடையில் அமைகிற அழகை இவரது கட்டுரைகளில் காணலாம்.

கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் எண்ணற்ற கட்டுரைகளையும், நூல்களையும் இயற்றிய இவர், 1982ல் “தோரு பெரளு” என்ற கன்னடக்க கட்டுரைத் தொகுப்பிற்காக மனிதப் பண்பு வகைக்கான கர்நாடக மாநில ‘சாஹித்ய அகடமி’ விருது பெற்றார். பல்துறை வித்தகரான ஹோ.வே. சேஷாத்ரி அவர்கள் 2005ல் காலமானார்.

Books Of H.V. சேஷாத்திரி

Shopping Cart