Biography
ரத்தன் ஷார்தா
திரு. ரத்தன் ஷார்தா அவர்கள் தனது சிறுவயது முதலே ஆர்.எஸ்.எஸ் ஸில் இணைந்து அதன் பல்வேறு அமைப்புகளில் செயல்புரிந்து வந்துள்ளார். புனித சேவியர் கல்லூரியில் கலைத் துறையில் பட்டம் பெற்ற இவர், மும்பை பல்கலைக்கழகத்தில் பட்டமேற்படிப்பு முடித்து பின்பு ‘ஹிந்து அமெரிக்க பல்கலைக் கழகத்தில் ஆராய்ச்சி படிப்பில் முனைவர் பட்டம் பெற்றார்.
திரு, ரத்தன் ஷார்தா அவர்கள் ‘ஆர்.எஸ்.எஸ் 360’, ‘பேராசிரியர் ராஜேந்திர சிங்கின் வாழ்க்கை வரலாறு’ (ஹிந்தி நூல்) மற்றும் ‘Memoirs of a Global Hindu’ போன்ற குறிப்பிடத்தக்க நூல்களையும் எழுதியுள்ளார். ஆர்.எஸ்.எஸ். இரண்டாவது தலைவர் ஸ்ரீ குருஜியைப் பற்றி திரு. ரங்க ஹரி அவர்கள் எழுதியுள்ள இரு நூல்கை இவர் மொழி பெயர்த்துள்ளார்.
பல செய்தி இணையங்களிலும், ‘ஆர்கனைசர்’ போன்ற ஆங்கில இதழ்களிலும் பல கட்டுரைகளை எழுதி வருவதோடு, பல ஆங்கில மற்றும் ஹிந்தி தொலைகாட்சி செய்தி ஊடகங்களில் அரசியல் சார்ந்த கருத்துக்களை ஆழமாக எடுத்துக்கூறும் பிரபல பேச்சாளரும் ஆவார்.