Free Shipping on Orders over ₹ 2,500/-

Biography

வினோபா பாவே

ஆச்சார்ய வினோபா பாவே (விநாயக் நரஹரி பாவே), செப்டம்பர் 11, 1895  மராட்டிய மாநிலம் மும்பைமாவட்டம் கொலபா எனும் கிராமத்தில்  நரசிம்புராவ்பாவே – ருக்மணிதேவி தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். வினோபா பாவே சிறந்த ஆன்மீக போதகர், மற்றும் தீவிர விடுதலை போராளி. மகாத்மா காந்தியுடன் இணைந்து இந்திய விடுதலைப் போராட்டத்தில் தீவிர பங்கு கொண்டார். ஆங்கிலேயே அரசை எதிர்க்கும் குழுவுக்கு காந்தி இவரைத் தலைவர் ஆக்கினார்.

13 ஆண்டுகள் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை நடைப்பயணமாகவே வந்து 2,95,054 ஏக்கர் நிலத்தை பூமிதான இயக்கத்திற்காக தானமாகப் பெற்றார். வினோபா பாவேயின் மிகச்சிறந்த தேசிய சேவைகளை பாராட்டி அவரது மறைவுக்கு பின் 1983ல் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. இவர் தனது 87ம் அகவையில் (15 நவம்பர் 1982) காலமானார்.

Books Of வினோபா பாவே

Shopping Cart