பூஜனீய டாக்டர் ஜி, குருஜி மற்றும் தேவரஸ்ஜி ஆகிய முதல் மூன்று சர் சங்கசாலகர்களின் வழி நடந்து சங்கத்தின் நான்காவது சர் சங்கசாலக் பொறுப்பினை ஏற்று அனைவராலும் அன்புடன் ‘ரஜ்ஜு பையா’ என்று அழைக்கப்பட்டவர் பேராசிரியர் ராஜேந்திர சிங் அவர்கள்.
கார்யகர்த்தர் குறித்து பரம பூஜனீய ஸ்ரீ குருஜி அவர்கள் மேற்கோள் காட்டிய உதாரணத்தின்படி, ரஜ்ஜு பையா அவர்கள் அனைவரும் அணுகும், ஏற்றுக் கொள்ளும், ஜொலிக்கும் வைரமாகத் திகழ்ந்தார்.
தன்னுடைய ஆசிரியர் பணியில் மிகச் சிறந்த பேராசிரியராக மாணவர்களை வழி நடத்தியது போல, சங்கப் பணியிலும் கார்யகர்த்தர்களை நேர்த்தியுடன் வழி நடத்தி, பல தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகளில் சங்கத்தின் தெளிவான கண்ணோட்டத்தை விளக்கி தேச நலனை முன் நிறுத்தி நல் வழிகாட்டினார்.
பேராசிரியர் ராஜேந்திர சிங் அவர்களின் சங்க வாழ்க்கைப் பயணத்தின் பல்வேறு அனுபவங்களையும், பல சுவாரஸ்யமான நிகழ்வுகளையும், மேலும் அவரோடு பழகிய கார்யகர்த்தர்களின் அனுபவங்களையும் ஒருங்கே தொகுத்து அழகிய பூச்சரமாக நூல் வடிவில் ‘பேராசிரியர் ராஜேந்திர சிங்கின் வாழ்க்கை பயணம்’ எனும் தலைப்பில் ஹிந்தி மொழியில் நமக்கு அளித்துள்ளார் திரு. ரதன் ஷார்தா அவர்கள்.
இதன் தமிழாக்கத்தை அழகு தமிழில் எளிய நடையில், தனக்கே உரித்தான பாங்குடனும், சொல் நயத்துடனும் மொழியாக்கம் செய்து அளித்துள்ளார் நமது தக்ஷிண க்ஷேத்ர சங்கசாலக் (தென் பாரத தலைவர்) முனைவர் இரா. வன்னியராஜன் அவர்கள்.
பூஜனீய ரஜ்ஜு பையா (பேராசிரியர் ராஜேந்திர சிங்) அவர்களின் வாழ்க்கைப் பயணம் குறித்த இந்நூல் சங்க ஸ்வயம்சேவகர்கள் மற்றும் கார்யகர்த்தர்களுக்கு சிறந்த வழிகாட்டியாகவும், சங்கப்பணியினை மேலும் உற்சாகத்துடன் செய்ய ஊக்கம் அளிப்பதாகவும் நிச்சயம் அமையும் என்று நம்புகின்றோம்.
Reviews
There are no reviews yet.