தேச நலனே பிரதானம் என கட்டுப்பாடும், அர்ப்பணிப்பும் நிரம்பப் பெற்ற இயக்கம் தான் ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் (ஆர்.எஸ்.எஸ்).
அதிகார பீடத்திலுள்ளவர்களின் ஆதிக்கங்களையெல்லாம் எதிர்கொண்டு, நாட்டின் மனசாட்சியை, அடக்குமுறையும், அவதூறும் நெரித்துக் கொன்று விட முடியாது என்ற நம்பிக்கையை மக்கள் மனதில் உதயமாகச் செய்கின்ற உணர்வுப் பூர்வமான முயற்சியே, இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நூலான (ஆர்.எஸ்.எஸ் ஸின்) “முதலாவது அக்னிப் பரீட்சை”.
1948 ஜனவரி 30ம் தேதி, காந்திஜி கொலையுண்ட சம்பவம், மன்னிக்கவே முடியாத குற்றம். தேசத்தைக் உலுக்கிய துக்ககரமான நாளும் கூட. ஆனால் மிகவும் துரதிர்ஷ்டவசமான ஒன்று என்னவெனில் இந்தக் கொலைக்கான அபாண்டமான பழி சங்கத்தின் மேல் விழுந்ததுதான். குருஜி கோல்வல்கர் காவலில் வைக்கப்பட்டு, சங்கத்தின் மீது கண்மூடித்தனமான வெறியாட்டம் நடந்தும், சங்கம் காட்டிய சுயக்கட்டுப்பாடு அதியற்புதமானது. சங்கம் நடத்திய சத்யாகிரகத்தில் சுமார் 1லட்சம் சங்க ஊழியர்கள் கைதாயினர். எனினும் அதனை நெஞ்சுரத்தடன் சட்டப் பூர்வமாக எதிர்கொண்டு அந்த தீராப் பழியிலிருந்து மீண்டு பன்மடங்கு வீரியத்துடன் ஒளிரும் சூரியனாக மிளிர்ந்தெழுந்தது. சங்கத்தை நசுக்க முடியாது என்று அரசும் உணர்ந்து கொண்டது.
1948ல் சங்கத்தின் மீதான இந்த முதல் தடை நிகழ்ந்து, அதன் நினைவாக 75வது ஆண்டு தொடங்கும் இவ்வேளையில், தமிழக மக்களுக்கு இந்த போராட்ட வரலாறின் உண்மை நிகழ்வுகளை கொண்டு சேர்க்க வேண்டிய முக்கியத்துவத்தை உணர்ந்து, இந்நூலின் தமிழாக்கத்தினை விஜயபாரதம் பிரசுரம் மிகுந்த பொறுப்புணர்வுடன் வெளியிடுகிறது.
இந்த தமிழாக்க நூல், தமிழ் வாசகர்களுக்கு, சங்கத்தின் (ஆர்.எஸ்.எஸ்) முதல் தடை பற்றிய உண்மையான வரலாற்று தகவல்களை தெரிந்து கொள்ள மிகச் சிறந்த ஆவணமாக இருக்கும் என்று நம்புகிறோம்.
Reviews
There are no reviews yet.