Book Language | தமிழ் |
---|---|
Publisher | விஜயபாரதம் பிரசுரம் |
Book Author | தி. ச. வைகுண்டம் |
ஸ்ரீ பாஸ்கர் ராவ் சங்கமெனும் நந்தவனத்தில் பூத்த ஒரு குறிஞ்சிமலர்
Original price was: ₹150.00.₹100.00Current price is: ₹100.00.
தமிழகத்தில் சங்கத்தின் அபரிமிதமான வளர்ச்சியில் பல பிரசாரகர்களின் அளப்பரிய பங்கினை நாம் என்றென்றும் நினைவுகூர்ந்து போற்றுகின்றோம்.
சங்கப்பாடல் ஒன்று உண்டு. “உந்தன் வடிவாய் வாழ நாங்கள் ஆசி வேண்டுகிறோம்”. ஒரு சங்க ஸ்வயம்சேவகனின் லட்சியம், டாக்டர்ஜியைப்போல வாழ முயற்சிப்பதுதான். அவ்வாறு டாக்டர்ஜியின் வாழ்க்கையிலிருந்து கற்று, அவரின் அடியொற்றி ஆதர்ஷ ஸ்வயம்சேவகராக, பிரசாரக்காக தன் வாழ்வையே அர்ப்பணித்தவர், பாஸ்கர்ராவ்ஜி என்று எல்லோராலும் அன்பாக அழைக்கப்படும் B. பாஸ்கர்ராவ் (எ) பம்மிடிப்பாடி பாஸ்கர்ராவ் அவர்களைப் பற்றிய வாழ்க்கை வரலாறே இந்த நூல்.
பாஸ்கர்ராவ்ஜி மறைந்து 28 ஆண்டுகள் கழிந்த பின்னர், அவரைப் பற்றிய தகவல்களைத் திரட்டி, பாஸ்கர்ராவ்ஜி சம்மந்தப்பட்ட பல அரிய சம்பவங்களை, விரிவாக, அழகாக இந்தப் புத்தகத்தில் பதிவு செய்திருக்கிறார் மதுரையைச் சேர்ந்த சங்கத்தின் மூத்த கார்யகர்த்தர் ஸ்ரீ தி.ச. வைகுண்டம்ஜி அவர்கள்.
பாஸ்கர்ராவ்ஜி அவர்களின் அர்ப்பணிப்பு மிகுந்த வாழ்வினை விளக்கும் இந்நூல், தற்போது சங்க வேலையில் இருக்கின்றவர்கள், வருங்காலங்களில் சங்க வேலை செய்ய இருக்கின்றவர்கள் மற்றும் ஏதோ ஒரு வகையில் சமுதாயப்பணியில் இருக்கின்ற எல்லோருக்குங்கூட இந்தப் புத்தகம் ஊக்கமும், உத்வேகமும் அளிக்கக்கூடியதாக இருக்கும் என எண்ணுகிறோம்.
You must be logged in to post a review.
Reviews
There are no reviews yet.