Free Shipping on Orders over ₹ 2,500/-
Sale!

ஸ்ரீ குருஜி – நெடுநோக்குப் பார்வையும், தேசப்பணியும்

Original price was: $ 400.Current price is: $ 300.

ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் இரண்டாவது சர் சங்கசாலக் பரமபூஜனிய மாதவ சதாசிவராவ் கோல்வல்கர் அவர்களின் நூற்றாண்டு சமயத்தில், சுருசி பிரகாஷன் (தில்லி) “ஸ்ரீ குருஜி – திருஷ்டி அவுர் தர்ஷன்” என்ற ஹிந்தி நூலினை வெளியிட்டார்கள். இதன் ஆங்கில மொழியாக்கத் தொகுப்பினை குருக்ஷேத்ர பிரகாஷன் (கொச்சி) “His Vision and Mission – M.S.Golwalkar” என்ற பெயரில் 2008ல் வெளியிட்டார்கள். இதனை தமிழாக்கத் தொகுப்பாக செய்யும் முயற்சியில் தற்போது விஜயபாரதம் பிரசுரம் (சென்னை) “ஸ்ரீ குருஜி – நெடுநோக்குப் பார்வையும், தேசப்பணியும்” எனும் தலைப்பில் புத்தகம் வெளியிடுவதில் பேருவகை கொள்கிறது.

இந்நூலினை திருவேடகம் விவேகானந்தா கல்லூரியின் முன்னாள் முதல்வரும் ஆர்.எஸ்.எஸ் தென்பாரதத் தலைவருமான முனைவர் வன்னியராஜன் அவர்கள், சீரிய முறையில் தமிழாக்கத் தொகுப்பினை செய்துள்ளார்கள். மிகுந்த ஈடுபாட்டுடன், அழகிய தமிழ் நடையில், தனக்கே உரிய பாணியில் எளிமையாகவும், தெளிவாகவும் மொழியாக்கம் செய்துள்ளார்கள்.

தனது வாழ்வு முழுவதும் தேசப்பணிக்கென அர்ப்பணம் செய்து, வாழ்வே வேள்வியாக, கண்ணன் கீதையில் கூறிய ஸ்திதப்ரக்ஞன் எனும் சொல்லுக்கு இலக்கணமாக வாழ்ந்த ஸ்ரீ குருஜி கோல்வல்கரின் சிந்தனைத் தொகுப்பாக விளங்கும் இந்நூல், தேசப் பணியில் இணைந்திருக்கும் அனைவருக்கும் சிறந்ததொரு வழிகாட்டியாக விளங்கும் என்று நம்புகிறோம்.

SKU: VB-78 Category:
Delivery in India Only.
Share
Publisher

விஜயபாரதம் பிரசுரம்

Book Language

தமிழ்

Book Author

வன்னியராஜன்

Reviews

There are no reviews yet.

Be the first to review “ஸ்ரீ குருஜி – நெடுநோக்குப் பார்வையும், தேசப்பணியும்”
Shopping Cart